pallaththakkin leeliyanavar en iyesu

பள்ளத்தாக்கின் லீலியானவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பள்ளத்தாக்கின் லீலியானவர் என் இயேசு
சாரோனின் ரோஜாவானவர்-2
இன்பமானவர் இனிமையானவர்
மதுரமானவர் இயேசு மகிமையானவர் -2
1)உம்மைப் போல் யாரும் இல்லை நல்ல தேவனே
உம்மையே சேவிப்பேன் என் தேவனே -2
இயேசுவே அழகில் சிறந்தவர்
எனக்காக யாவும் செய்து முடிப்பவர் 2
2) யேகோவாயீரே பார்த்துக் கொள்ளுவீர்
யேகோவா நிசியே ஜெயம் தருவீர் -2
தேனிலும் இனிமையானவர்
தேவனே நீரே மகிமையானவர் -2
3) போற்றுவேன் புகழ்வேன் ஆத்துமாவிலே
ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் ஆவியினாலே -2
கர்த்தரை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
தாவிதைப் போல் நான் நடனம் ஆடுவேன் -2