paliyakap pataikkiren en iyesuve

பலியாக படைக்கிறேன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பலியாகப் படைக்கிறேன் என் இயேசுவே
உம் பாதம் வந்தேன் பலியாகவே
நிறைவுள்ள பலியோ இல்லை
குறையுள்ளோன் தானய்யா
நல்லதோர் பலியும் இல்லை
கெட்டுப்போன இருதயமய்யா
இருப்பதை தருகின்றேன் என்னை ஏற்றுக்கொள்ளும் தகப்பனே
தந்தை என உம்மை அழைக்கும் தகுதியை இழந்து நிற்கிறேன்
பரிசுத்தரே பலியானவரே
பரிசுத்தரே என் ஆத்தும நேசரே
பாவி என் உள்ளத்திலா நீர் வாழ விரும்பினீர்
ஏன் இந்த அன்பு என் நேசரே
இன்னுமா பாசம் என் மீதிலே
உயர்ந்த ஓர் இடத்தில் வைத்தீர்
உம்மை விட்டே ஓடினேன்
தாழ்ந்த நிலை வந்த போதும்
உம்மை தானே தாழ்த்தி தூற்றினேன்
எந்த ஒரு சூழலிலும் நீர் என்னை விட்டு விலகவில்லை
என்னை விட்டு விலகும்படி ஒரு நொடியும் நினைத்ததில்லை
பரிசுத்தரே பலியானவரே
பரிசுத்தரே என் ஆத்தும நேசரே
பாவி என் உள்ளத்திலா நீர் வாழ விரும்பினீர்