palamum alla parakkiramum alla

பலமும் அல்ல பராக்கிரமும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினாலாகும்-தேவ ஆவியினாலாகும்
பெரியப் பர்வதமே நீ எம்மாத்திரம்
தேவப் பிள்ளையின் முன் சமபூமியாவாய்
தலைக் கல்லைக் கொண்டு வந்திடுவேன்
கிருபை உண்டாவதாக – தேவ
சிறியப் பிசாசே நீ எம்மாத்திரம்
தேவப் பிள்ளையின் முன் நிர்மூலமாவாய்
இயேசுவைக் கொண்டு வந்திடுவேன்
கிருபை உண்டாவதாக – தேவ
பரிசுத்த தேவனே நீர் என் தேவன்
வானிலும் பூவிலும் பெரியவர் பெரியவர்
இயேசுவின் நாமத்தில் வென்றிடுவேன்
கிருபை உண்டாவதாக – தேவ