palaiyaththil pelisthiyaram payaththinile israyelam – 2

பாலையத்தில் பெலிஸ்தியராம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாலையத்தில் பெலிஸ்தியராம் பயத்தினிலே இஸ்ராயேலாம் – 2
கோலியாத் வந்தான் கொலை வெறியுடன் நின்றான் – 2
நம்பினோரை ஆண்டவர் காத்திடாது விடுவார்
பாலையத்தில் பெலிஸ்தியராம் பயத்தினிலே இஸ்ராயேலாம்
1. யாருண்ணே அந்த கோலியாத்து பெரிய கொலை காரணோ அவனப்பத்தி கொஞ்சம் சொல்லுங்கண்ணே
அவன் நின்றால் நிலம் அதிர்ந்தது
அவன் நடந்தால் மலை பெயர்ந்தது
அவன் உருவம் வானைத்தொட்டது
கர்வம் வாரிவிட்டது – 2
ஆண்டவரை பழித்த பெரும் கலிப்படைந்தான் சவுலையும் அவமதித்தே நகைப்புரிந்தான்
தலை சிறந்த தலைவன் என தனை நினைத்தான்
தான் என்ற ஆணவத்தில் அவன் மிதந்தான்
வெறியனை வென்றிட எவரும் உளரோ
2. அந்த கோலியாத்த தோக்கடிக்க யாருமே இல்லையா அண்ணே ஐயோ பாவம் அந்த இஸ்ரேல் மக்கள் என்னண்ணே
வந்தான் ஒரு மாவீரன்
அவன் தான் நம் தாவீது
அவன் படைக்கலம் கவன் கல்லே
துணை வரும் கரம் இறை சொல்லே – 2
காப்பவரை நம்பி அவன் முன் சென்றான்
கர்வத்தோடு வந்தவனை கொன்று போட்டான் – 2
வென்றது கடவுளின் வல்லமை ஒன்றே
பாலையத்தில் பெருவிழாவாம்
பயத்தினிலே பெலிஸ்தியராம் – 2
தாவீது வந்தார் இந்த தரணியை வென்றார்
நம்பினோரை ஆண்டவரும் கைவிடவேமாட்டார்
பாலையத்தில் பெருவிழாவாம் பயத்தினிலே பெலிஸ்தியராம்