padharaadhae thigaiyaadhae

மலையாய் எழும்பும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மலையாய் எழும்பும் சவாலோ
அரை கூவும் ஒரு கோலியாத்தோ
கன்மலையாம் தேவ நாமம் உண்டு
உன் எதிரியைக் கீழ்ப்படுத்த -2
பதறாதே திகையாதே வேண்டிடு விசுவாசம்
பதறாதே திகையாதே கொண்டாடு தேவபலம்
அலையலையாய் வரும் சோதனையோ
தலைமேல் புரண்டு ஓடுதோ
கடல்மேல் நடக்கும் தேவன் உண்டு
உன் கஷ்டத்தை மறைய செய்ய -2- பதறாதே
ஆழ்கடல் முன்னின்று வழியை மறிக்குமோ
தாழ்கதவு பூட்டி உன்னைத் தடுக்குமோ
கோல் நீட்டிக் கடலை பிளந்தவரே
முன்னேற வழிகள் திறப்பாரே -2- பதறாதே