Paavi Ennidam Vara

பாவி என்னிடம் வர

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
பாவி, என்னிடம் வர
மனதில்லையா? ஓ!
சரணங்கள்
1. பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீ,
சீவன் தனைப்பெறவே. – ஓ! பாவி
2. இருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த்
தெருளொளி தனைப் பெறவே. – ஓ! பாவி
3. என் சமாதானம் உன் சுகமாகும்,
நெஞ்சைப் பூராய்த் திறந்து. – ஓ! பாவி
4. அசுத்தங்கள் நீங்கிப் பசிதாகமில்லையோ?
பரிசுத்தஞ் செய்வேனே. – ஓ! பாவி
5. மண்ணிலே நேசம் வைப்பாயோ மோசம்,
விண்ணிலிடங் கிடையா. – ஓ! பாவி
6. எனதிடம் அருகும் எவரையுந் தள்ளேன்,
கணத்தில் விரைந்திடுவாய். – ஓ! பாவி