Paavathin Baarathinaal Thavithidum

பாவத்தின் பாரத்தினால்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.

பாவத்தின் பாரத்தினால் – Paavaththin Paaraththinaal
பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும் இயேசு நாதா
கெட்ட குமாரனைப் போல்
துஷ்டனாய் அலைந்தேனையா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனையா
தந்தையை விட்ட பின்பு
தவிடு தான் ஆகாரமோ
மனங்கசந்து நொந்தென்
கண்ணீரைத் துடைத்திடுமே
கள்ளனாயினும் நான்
நீர் பெற்ற பிள்ளையல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீர்
தள்ளாதே சிலுவை நாதா
தாய் தந்தை தமயரெல்லாம்
என்னைக் கை விடுவார்கள்
சாகும் நாளில் தாங்குவார்
நீரல்லால் யாருமில்லை