Paatith Thuthi Manamae

பாடித் துதி மனமே பரனைக்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
1.தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்து
2. சொந்த ஜனமான யூதரைத் தள்ளி
தொலையில் கிடந்த புற மாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காக
3. எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய் கிருபை வைத்த நம் கர்த்தனை