Paalar Nesanae Miga Pariuv

பாலர் நேசனே மிகப் பரிவு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்
பாலரே யேந்தி ஆசிர்வதியும் யேசுவே
சரணங்கள்
1.பாலர் வந்திடத் தடை பண்ணாதென்றீர்
சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர் – பாலர்
2.வானராச்சியம் இவர் வசத்த தென்றீரே
ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர் – பாலர்
3.கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்
தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே – பாலர்
4.தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்
மேவினீரதால் உமை வேண்டினோ மையா – பாலர்
5.ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற
ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே – பாலர்
6.தாசர் நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்
நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர் – பாலர்