Paalaivanamai Irundha Engala

பாலைவனமாய் இருந்த எங்களை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா – 2
அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடு இணைத்துவிட்டீரே – 2 எங்களை (2)
கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா – 2 – 2 எங்களை (2)
வறண்ட நிலத்தை போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய் மாற்றினீரையா – 2 – 2 எங்களை (2)
நம்பிக்கையற்றவராய் இருந்தோமே
எங்களை நங்கூரமாய் மாற்றிவிட்டீரே – 2 – 2 எங்களை (2)