paakiyavaangal paakiyavaangal

பாக்கியவான்கள் பாக்கியவான்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
இயேசுவின் சமூகத்தில் பாக்கியவான்கள்
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்
பரலோக ராஜ்யம் அவர்களுடையது
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்
அவர்கள் ஆறுதல் அடைவார்கள்
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்
தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்
நீதிக்காக துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்
பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது
என் நிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி
பலவித தீமையான சொற்களை உங்கள் பேரில்
பொய்யான சொன்னால் பாக்கியவான்கள்
பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாய் இருக்கும்