Paadiduvean ummai paadiduvean

இதயமே பாடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
கைத்தாள ஓசையோடு பாடிடுவேன்
பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
சங்கீத ராகத்தோடு பாடிடுவேன்
உமக்காக என்றும் பாடிடுவேன்
உயிர் உள்ளவரை பாடிடுவேன்
இதயமே பாடு உணர்ந்து பாடு
உதடே பாடு உயர்த்தி பாடு
இயேசுவை பார்க்கும் வரை… இயேசுவை ரசிக்கும் வரை – 2
பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
கைத்தாள ஓசையோடு பாடிடுவேன்
சேற்றில் கிடந்தேன்… நாற்றமானேன்
சிலுவை சுமந்ததால்… வாசனையானேன்
சேற்றில் கிடந்தேன்… நாற்றமானேன்
உம் இரத்தத்தாலே… வாசனையானேன்
பாவத்தை மன்னித்தீர்… பரிசுத்தமாக்கினீர்
சாபத்தை மறந்து விட்டீர்… பிள்ளையாய் மாற்றினீர்
ஊழியம் செய்ய வைத்தீர்… சீஷனாய் மாற்றிவிட்டீர்
உம்மை பாடாமல் இருக்கவே முடியாது
உம்மை துதிக்காமல் வாழவே முடியாது – 2 (பாடிடுவேன்)
உம்மை விட்டு… விலக நினைத்தேன்
உம் சத்தம் கேட்டு… ஓடி ஒளிந்தேன்-2
கூடவே நீர் இருந்தீர்… வார்த்தையை அறிய வைத்தீர் – 2
உம் சித்தம் செய்து விட்டீர்… எழுப்புதல் பார்க்க வைத்தீர்
உம்மை பாடாமல் இருக்கவே முடியாது
உம்மை துதிக்காமல் வாழவே முடியாது – 2 (பாடிடுவேன்)