paadi thuthiththu potti

பாடி துதித்து போற்றி புகழ்வோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாடி துதித்து போற்றி புகழ்வோம் தேவாதி தேவனையே முழு மனதுடனே
பாவத்தைப் போக்கினாரே பாதையும் காட்டினாரே
ஞானம் மீட்பும் அவரே மெய்யான புகலிடமே
சிலுவை சுமந்தாரே பாடுகள் சகித்தாரே
யாவும் நமக்காயே பாதம் பணிவோமே
மாறாத மகத்துவமே மங்காத ஒளி விளக்கே
மகிமை நிறைந்தவரை மகிழ்ந்து மனமதிலே
வானம் பூமியாவிலும்ட கர்த்தரே பெரியவர்
அகிலமும் படைத்தாரே அவர்க்கிணை அவரே
ஆதியும் அந்தமும் அல்பா ஓமேகாவுமே
வருவேன் என்றுரைத்தாரே அவரோடே ஏகிடுவோம்