Our Lady of Rosary
ஜெபமாலை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
Our Lady of Rosary
அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரம்:
அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை
இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே
ஆமென்.
பரிசுத்த ஆவிக்கு மன்றாட்டு:
பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும்.
தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும்.
உத்தம
ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள
இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே, வெயிலின் குளிர்ச்சியே, அழுகையின்
தேற்றரவே எழுந்தருளி வாரும்.
வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும்.
உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.
அசுத்தமாயிருக்கிரதைச் சுத்தம் பண்ணும்.
உலர்ந்ததை நனையும்.
நோவாயிருக்கிரதைக் குணமாக்கும்.
வணங்காதை வணங்கப் பண்ணும்.
குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும்.
தவறினதை செம்மையாய் நடத்தும்.
உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும்.
புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
சர்வேசுவரா
எங்களுக்கு உதவியாயிரும். கர்த்தாவே எங்களுக்கு ஒத்தாசை செய்தருளும்.
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியில்
இருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.
ஜெபமாலை துவங்கும் விதம்:
அளவில்லாத சகல நன்மையும், சுரூபியுமயிருக்கிற எங்கள் சர்வேசுரா சுவாமி!
நீச மனிதரும் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்களது மட்டில்லாத மகிமை
பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச்சந்நிதிலே இருந்து ஜெபம்
பண்ணப் பாத்திரமாகாதவர்களாய் இருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத தயவை
நம்பிக்கொண்டு தேவரீருக்குத் துதி வணக்கமாகவும் பரிசுத்த தேவ மாதாவிற்குத்
ஸ்தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணி ஜெபம் பண்ண ஆசையாயிருக்கிறோம். இந்த
ஜெபத்தை பக்தியோடே செய்து, பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய
ஒத்தாசையைக் கட்டளை பண்ணியருளுங்கள் சுவாமி. சகலமான புண்ணியங்களுக்குள்ளே
விசுவாசம் என்கின்ற புண்ணியம் அஸ்திவாரமாய் இருக்கிறபடியினாலே முந்த முந்த
விசுவாசப்பிரமானம் சொல்கிறது.
ஜெபமாலை செய்யும் முறை:
1. பாடுபட்ட சிலுவையில்:
விசுவாசப் பிரமாணம்:
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச்சிஷ்ட கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.
போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.
நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறேன்.
-ஆமென்.
2. பெரிய மணியில்:
மெய்யான இறைவனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற இயேசுநாதர் சுவாமி படிப்பித்த பரலோக மந்திரம் சொல்கிறது.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
ஆமென்.
3. மூன்று சிறிய மணியில்:
1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
அருள்
நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள்
ஆசீர்வதிக்கப்பட்வர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும்
ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே
பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
அருள் நிறைந்த....
3.
தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித
இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
அருள் நிறைந்த....
4. மூன்று சிறிய மணிகளுக்குப் பின்:
திரித்துவத் துதி:
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே
இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
5. ஒவ்வொரு மறை உண்மைகளைச் சொல்லி தியானிப்போம்:
ஒரு பரலோக மந்திரம், 10 அருள் நிறைந்த மந்திரம் மற்றும் ஒரு திரித்துவத் துதி சொல்வோம்.
6. ஒவ்வொரு பத்து மணிகள் முடிந்ததும்:
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும்.
எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும்.
உமது இரக்கம் யார் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களை மோட்சம் கொண்டு சேர்த்தருளும்.
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்:
(திங்கள், சனி)
கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக.
கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
இயேசு
கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின்
திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
துயர் மறை உண்மைகள்:
( செவ்வாய், வெள்ளி)
இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக!
இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டதைத் தியானித்து, புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக!
இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒடுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும் செபிப்போமாக!
இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக!
இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக!
மகிமை நிறை மறை உண்மைகள்:
( புதன், ஞாயிறு )
இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசத்துடன் வாழ செபிப்போமாக!
இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!
தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!
இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக !
இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக !
ஒளி நிறை மறை உண்மைகள்:
(வியாழக் கிழமை)
இயேசு யோர்தான ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக !
கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக !
இயேசு விண்ணரசைப் பறைசாற்றியதை தியானிப்போமாக !
இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக !
இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக !
ஜெபமாலை நிறைவில்:
அதிதூதரான புனித மிக்கேலே, தேவதூதர்களான புனித கபிரியேலே, ரபேலே அப்போஸ்தலர்களான
புனித இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே நாங்கள் எத்தனை
பாவிகளாயிருந்தாலும், நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஜம்பத்து மூன்று
மணிசெபத்தையும் உங்கள் ஸ்தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி புனித தேவமாதாவின்
திருப்பாதத்தில் பாத காணிக்கையாக வைக்க உங்களைப் பிராத்தித்துக் கொள்கிறோம்.
ஆமென்.
புனித தேவமாதாவின் பிராத்தனை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
புனித மரியோயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சர்வேசுரனுடைய புனித மாதாவே -எங்களுக்காக ...
கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே ...
மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே...
கிறிஸ்துவினுடைய மாதாவே...
தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே...
மகா பரிசுத்த மாதாவே...
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..
பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே...
கன்னி சுத்தங்கெடாத மாதாவே...
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே...
ஆச்சரியத்துக்குரிய மாதாவே...
நல்ல ஆலோசனை மாதாவே,,,
சிருஷ்டிகருடைய மாதாவே...
இரட்சகருடைய மாதாவே...
மகா புத்தியுடைத்தான கன்னிகையே...
மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே...
பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட்ட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே...
சக்தியுடைத்தவளாயிருக்கிற கன்னிகையே...
தயையுள்ள கன்னிகையே...
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே....
தருமத்தின் கண்ணாடியே...
ஞானத்துக்கு இருப்பிடமே...
எங்கள் சந்தோஷத்தின் காரணமே...
தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா புஷ்பமே...
ஞான பாத்திரமே...
மகிமைக்குரிய பாத்திரமே...
அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே...
தாவீது இராஜாவுடைய உப்பரிகையே...
தந்த மயமாயிருக்கிர உப்பரிகையே...
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே...
வாக்குத்தத்தத்தின் பெட்டகமே...
பரலோகத்தினுடைய வாசலே...
விடியக்காலத்தின் நட்சத்திரமே...
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே...
பாவிகளுக்கு அடைக்கலமே...
கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே...
கிறிஸ்தவர்களுடைய சகாயமே...
சம்மனசுக்களுடைய இராக்கினியே...
பிதா பிதாக்களுடைய இராக்கினியே...
இறைவாக்கினர்களுடைய இராக்கினியே...
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே...
மறைசாட்சிகளுடைய இராக்கினியே...
துதியர்களுடைய இராக்கினியே...
கன்னியர்களுடைய இராக்கினியே...
அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே...
ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே...
பரலேகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே...
திருச் செபமாலையின் இராக்கினியே...
சமாதானத்தின் இராக்கினியே...
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே எங்கள் மேல் இரக்கமாயிரும்
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள்
அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும்.
ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே !
சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். -ஆமென்.
இயேசு
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி,
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஜெபிப்போமாக :
இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து
எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல
சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும்.
இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப்
பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்
கிருபை தயாபத்து மந்திரம்
கிருபை
தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே,
எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின்
மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம்.
இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.
ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்.
இதன்றியே
நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும்.
கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!
- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
ஜெபிப்போமாக:
சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற
கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே
தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே
நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய
இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய
மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த
மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப்
பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.
புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:
மிகவும்
இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை
இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும்
உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும்.
கன்னியருடைய
இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால்
ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம்.
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம்.
அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே -ஆமென்
ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சிஷ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம்.
எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
-அருள்நிறைந்த மந்திரம் (மூன்று முறை)
பரிசுத்த பாப்பரசரின் கருத்துக்கள் நிறைவேறும் படியாக ஜெபிப்போமாக :
ஒரு பரலோக மந்திரம், ஒரு அருள் நிறைந்த மந்திரம் மற்றும் ஒரு திரித்துவத் துதி சொல்வோம்.
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.
Our Lady of Rosary
arssishta siluvai manthiram:
arssishta siluvai ataiyalaththinale engkal saththurukkalitamirunthu engkalai
iratsiththarulum engkal sarvesuvara! pitha, suthan, parisuththa aaviyin peyarale
aamen.
parisuththa aavikku manrattu:
parisuththa aaviye thevareer ezhuntharuli varum. paralookaththile ummutaiya thivviya pirakasaththin kathirkalai varavitum.
thariththarkalutaiye pithave, kotaikalaik kotukkiravare, ithayangkalin pirakasame ezhuntharuli varum.
uththama
aaruthalanavare, aaththumangkalukku mathuramana virunthaliye, perinpa irasamulla
ilaipparriye, pirakasaththin sukame, veyilin kulirssiye, azhukaiyin
therrarave ezhuntharuli varum.
veku aananthaththoote kootiyirukkinra pirakasame umathu visuvasikalutaiya ithayangkalin urpanangkalai nirappum.
ummutaiya theyveekaminriye manitharitaththil kurramillathathu onrumillai.
asuththamayirukkirathais suththam pannum.
ularnthathai nanaiyum.
noovayirukkirathaik kunamakkum.
vanangkathai vanangkap pannum.
kulirootirukkirathaik kulirpookkum.
thavarinathai semmaiyay nataththum.
ummai nampina ummutaiya visuvasikalukku ummutaiya thirukkotaikal ezhaiyum kotuththarulum.
punniyaththin perukalaiyum, nalla maranaththaiyum, niththiya mootsanantha santhoosaththaiyum engkalukkuth thantharulum. aamen.
sarvesuvara
engkalukku uthaviyayirum. karththave engkalukku oththasai seytharulum.
pithavukkum, suthanukkum, parisuththa aavikkum makimai untavathaka. aathiyil
irunthathu poola ippozhuthum, eppozhuthum engkal marana neraththilum ventikkollum.
aamen.
jepamalai thuvangkum vitham:
alavillatha sakala nanmaiyum, suroopiyumayirukkira engkal sarvesura suvami!
neesa manitharum nanriyariyatha pavikalumayirukkira atiyoorkalathu mattillatha makimai
pirathapaththaik kontirukkira thevareerutaiya thirussannithile irunthu jepam
pannap paththiramakathavarkalay irunthalum, thevareerutaiya alavillatha thayavai
nampikkontu thevareerukkuth thuthi vanakkamakavum parisuththa theva mathavirkuth
sthooththiramakavum aimpaththu moonru mani jepam panna aasaiyayirukkiroom. intha
jepaththai pakthiyoote seythu, parakkillamal mutikkath thevareerutaiya
oththasaiyaik kattalai panniyarulungkal suvami. sakalamana punniyangkalukkulle
visuvasam enkinra punniyam asthivaramay irukkirapatiyinale muntha muntha
visuvasappiramanam solkirathu.
jepamalai seyyum murai:
1. patupatta siluvaiyil:
visuvasap piramanam:
paralookaththaiyum poolookaththaiyum pataiththa ellam valla pithavakiya sarvesuranai visuvasikkiren.
avarutaiya eka suthanakiya nammutaiya nathar iyesu kiristhuvaiyum visuvasikkiren.
ivar parisuththa aaviyinal karppamay urpaviththu arssishta kannimariyayitamirunthu piranthar.
poonysu pilaththin athikaraththil patupattu, siluvaiyil araiyuntu, mariththu atakkam seyyappattar.
pathalaththil irangki moonram nal mariththooritamirunthu uyirththezhunthar.
paralookaththirku ezhuntharuli, ellam valla pithavakiya sarvesuranutaiya valathu pakkam veerrirukkirar.
avvitaththilirunthu jeeviyaraiyum mariththavaraiyum natuththeerkka varuvar.
parisuththa aaviyai visuvasikkiren.
parisuththa kaththoolikka thirussapaiyai visuvasikkiren.
arssiyasishtavarkalutaiya samootheethap pirayoosanaththai visuvasikkiren.
pavap poruththalai visuvasikkiren.
sareera uththanaththai visuvasikkiren.
niththiya jeeviyaththai visuvasikkiren.
-aamen.
2. periya maniyil:
meyyana iraivanum meyyana manithanum onrayirukkira iyesunathar suvami patippiththa paralooka manthiram solkirathu.
paralookaththil irukkira engkal pithave, ummutaiya namam arssikkap patuvathaka.
ummutaiya iratssiyam varuka. ummutaiya siththam paralookaththil seyyappatuvathu poola, poolookaththilum seyyappatuvathaka.
engkal anuthina unavai engkalukku inru aliththarulum.
engkalukkuth theemai seythavarkalai nangkal poruppathupoola, engkal pavangkalaip poruththarulum.
engkalais soothanaiyil vizhavitatheyum.
theemaiyilirunthu engkalai iratsiththarulum.
aamen.
3. moonru siriya maniyil:
1. parama thanthaiyam iraivanukku makalay irukkira punitha iraiyannaiye, engkalitam visuvasam palanalikkumpatiyaka um thirumainthanai manratum.
arul
niraintha mariye vazhka! karththar ummutane. penkalukkul
aaseervathikkappatvar neere. ummutaiya thiruvayirrin kaniyakiya iyesuvum
aaseervathikkappattavare.
arssishta mariyaye, sarvesuranutaiya mathave
pavikalayirukkira engkalukkaka ippozhuthum engkal marana neraththilum
ventikkollum. -aamen.
2. thirumakanam iraivanukkuth thayay irukkira punitha iraiyannaiye, engkalitam nampikkai valarumpatiyaka um thirumainthanai manratum.
arul niraintha....
3.
thooya aaviyarakiya iraivanukku mikavum erputaiyavaray irukkira punitha
iraiyannaiye, engkalitam anpu valarumpatiyaka um thirumainthanai manratum.
arul niraintha....
4. moonru siriya manikalukkup pin:
thiriththuvath thuthi:
pithavukkum, suthanukkum, parisuththa aavikkum makimai untavathaka. aathiyile
irunthathu poola, ippozhuthum eppozhuthum enrenrum iruppathaka. aamen.
5. ovvoru marai unmaikalais solli thiyanippoom:
oru paralooka manthiram, 10 arul niraintha manthiram marrum oru thiriththuvath thuthi solvoom.
6. ovvoru paththu manikal mutinthathum:
oo en iyesuve! engkal pavangkalaip poruththarulum.
naraka neruppilirunthu engkalai meettarulum.
ellaraiyum vinnulakap pathaiyil nataththiyarulum.
umathu irakkam yar yarukku athikath thevaiyoo avarkalai mootsam kontu serththarulum.
makizhssi nirai marai unmaikal:
(thingkal, sani)
kapiriyel thoothar kannimariyavukku mangkala varththai sonnathai thiyaniththu, thazhssi ennum varaththaik kettus sepippoomaka.
kanni mariyal elisapeththammalais santhiththathaith thiyaniththu, piraranpu ennum varaththaik kettu sepippoomaka.
iyesu piranthathaith thiyaniththu, elimai ennum varaththaik kettu sepippoomaka.
iyesu
kooyilil kanikkaiyaka oppuk kotuththathai thiyaniththu, iraivanin
thiruvulaththukkup paninthu natakkum varaththaik kettu sepippoomaka.
kanamar poona iyesuvaik kantatainthathai thiyaniththu, nam avarai ennalum thetum varaththaik kettu sepippoomaka.
thuyar marai unmaikal:
( sevvay, velli)
iyesu iraththa viyarvai sinthiyathaith thiyaniththu, nam pavangkalukkaka manaththuyar ataiya sepippoomaka!
iyesu karroonil kattuntu atippattathaith thiyaniththu, pulankalai atakki vazhum varam ketpoomaka!
iyesu mulmuti thariththathaith thiyaniththu, nammaiye otukkavum, ninthai thoolvikalai makizhvutan erkavum sepippoomaka!
iyesu siluvai sumanthu senrathaith thiyaniththu, vazhkkais sumaiyai porumaiyootu erru vazhas sepippoomaka!
iyesu siluvaiyil araiyappattu iranthathaith thiyaniththu, iyesuvai anpu seyyavum, pirarai mannikkavum varam ketpoomaka!
makimai nirai marai unmaikal:
( puthan, nyayiru )
iyesu uyirththezhunthathaith thiyaniththu, uyirulla visuvasaththutan vazha sepippoomaka!
iyesuvin vinnerraththaith thiyaniththu, nampikkaiyutan vinnaka vazhvaith thetum varam ketpoomaka!
thooya aaviyarin varukaiyaith thiyaniththu, nam anaivarum aaviyarin oliyaiyum anpaiyum pera sepippoomaka!
iraiyannaiyin vinnerpaith thiyaniththu, namum vinnaka makimaiyil pangkupera sepippoomaka !
iraiyannai vinnaka mannaka arasiyaka manimuti soottap perrathaith thiyaniththu, nam annaiyin meethu aazhntha pakthi kolla sepippoomaka !
oli nirai marai unmaikal:
(viyazhak kizhamai)
iyesu yoorthana aarril thirumuzhukku perrathai thiyanippoomaka !
kanavoor thirumanaththil iyesu thanneerai thiratsai irasamaka marriyathai thiyanippoomaka !
iyesu vinnarasaip paraisarriyathai thiyanippoomaka !
iyesu thapoor malaiyil urumarram perrathai thiyanippoomaka !
iyesu kataisi ira virunthuntathaiyum narkarunai erpatuththiyathaiyum thiyanippoomaka !
jepamalai niraivil:
athithootharana punitha mikkele, thevathootharkalana punitha kapiriyele, rapele appoosthalarkalana
punitha irayappare, sinnappare, arulappare nangkal eththanai
pavikalayirunthalum, nangkal ventikkonta intha jampaththu moonru
manisepaththaiyum ungkal sthooththirangkaloote onrakak kootti punitha thevamathavin
thiruppathaththil patha kanikkaiyaka vaikka ungkalaip piraththiththuk kolkiroom.
aamen.
punitha thevamathavin piraththanai
suvami kirupaiyayirum
kiristhuve kirupaiyayirum
suvami kirupaiyayirum
kiristhuve engkal piraththanaiyaik kettarulum
kiristhuve engkal piraththanaiyai nanrakak kettarulum
paramantalangkalile irukkira pithavakiya sarvesura -engkalai thayaipanni iratsiyum suvami
ulakaththai meettu iratsiththa suthanakiya sarvesura -engkalai thayaipanni iratsiyum suvami
thooya aaviyakiya sarvesura -engkalai thayaipanni iratsiyum suvami
punitha mariyooye -engkalukkaka ventikkollum
sarvesuranutaiya punitha mathave -engkalukkaka ...
kanniyasthireekalin uththama kannikaiye ...
maka anpirku paththiramayirukkira mathave...
kiristhuvinutaiya mathave...
theva varappirasathaththin mathave...
maka parisuththa mathave...
aththiyantha viraththiyayirukkira mathave..
pazhutharra kannikaiyayirukkira mathave...
kanni suththangketatha mathave...
maka anpukkup paththiramayirukkara mathave...
aassariyaththukkuriya mathave...
nalla aaloosanai mathave,,,
sirushtikarutaiya mathave...
iratsakarutaiya mathave...
maka puththiyutaiththana kannikaiye...
maka vanakkaththukkuriya kannikaiye...
pirakasamay sthuthikkappatta yookkiyamayirukkira kannikaiye...
sakthiyutaiththavalayirukkira kannikaiye...
thayaiyulla kannikaiye...
visuvasiyayirukkira kannikaiye....
tharumaththin kannatiye...
nyanaththukku iruppitame...
engkal santhooshaththin karaname...
theva irakasiyaththaik kontirukkira rooja pushpame...
nyana paththirame...
makimaikkuriya paththirame...
aththiyantha pakthiyutaiththana paththirame...
thaveethu irajavutaiya upparikaiye...
thantha mayamayirukkira upparikaiye...
sorna mayamayirukkira aalayame...
vakkuththaththaththin pettakame...
paralookaththinutaiya vasale...
vitiyakkalaththin natsaththirame...
viyathikkararukku aarookkiyame...
pavikalukku ataikkalame...
kasthippatukiravarkalukku therrarave...
kiristhavarkalutaiya sakayame...
sammanasukkalutaiya irakkiniye...
pitha pithakkalutaiya irakkiniye...
iraivakkinarkalutaiya irakkiniye...
appoosthalarkalutaiya irakkiniye...
maraisatsikalutaiya irakkiniye...
thuthiyarkalutaiya irakkiniye...
kanniyarkalutaiya irakkiniye...
anaiththup punitharkalutaiya irakkiniye...
jenma pavaminri urpaviththa irakkiniye...
paralekaththukku aaroopanamana irakkiniye...
thirus sepamalaiyin irakkiniye...
samathanaththin irakkiniye...
ulakin pavangkalaip pookkum iraivanin semmariye engkal pavangkalaip poruththarulum
ulakin pavangkalaip pookkum iraivanin semmariye engkal manrattaik kettarulum
ulakin pavangkalaip pookkum iraivanin semmariye engkal mel irakkamayirum
sarvesuranutaiya parisuththa mathave ! ithoo ummutaiya saranamaka ootivanthoom. engkal
avasarangkalile nangkal ventik kollukiratharkup paramukamay iratheyum.
aaseervathikkappattavalumay mootsamutaiyavalumayirukkira niththiya kannikaiye !
sakala aapaththukkalileyum ninru engkalaith tharkaththuk kollum. -aamen.
iyesu
kiristhuvin vakkuruthikalukku nangkal thakuthiyullavarkal aakumpati,
sarvesuranutaiya parisuththa mathave engkalukkaka ventikkollum.
jepippoomaka :
iraiva! muzhumanathoote thentanaka vizhunthukitakkira intha kutumpaththaip parththu
eppozhuthum parisuththa kanniyana mariyalutaiya ventuthalinale, sakala
saththurukkalin sarpanaiyile ninru pirasannarayth thayai seythu iratsiyum.
intha manrattukkalai ellam engkal aantavarana iyesunatharutaiya thirumukaththaip
parththu engkalukkuth thantharulum. -aamen
kirupai thayapaththu manthiram
kirupai
thayapaththukku mathavayirukkira engkal irakkiniye vazhka! engkal jeeviyame,
engkal thanysame, engkal mathurame vazhka! parathesikalayirukkira nangkal evaiyin
makkal, ummaip parththu kooppitukiroom.
inthak kanneerk kanavayile ninru piralapiththazhuthu, ummaiye nookkip perumoossu vitukiroom.
aathalal engkalukkaka venti manratukira thaye, ummutaiya thayalamulla thirukkankalai engkal peril thiruppiyarulum.
ithanriye
nangkal inthap parathesam katantha pirpatu ummutaiya thiruvayirrin kaniyakiya
iyesunatharutaiya piraththiyatsamana tharisanaththai engkalukkuth thantharulum.
kirupakariye, thayapariye, perinpa irasamulla kannimariyaye!
- iyesu kiristhu natharutaiya thiru vakkuththaththangkalukku nangkal paththiravankalay irukkaththakkathaka
- sarvesuranutaiya parisuththa mathave engkalukkaka ventikkollum. -aamen.
jepippoomaka:
sarva sakthiyutaiyavarumay niththiyarumay irukkira iraiva! muththiperuperra
kanniththayana mariyayinutaiya aaththumamum sareeram thooya aaviyin anukkarakaththinale
thevareerutaiya thirumakanukku yookkiyamana peetamayirukka erkenave
niyamiththarulineere. antha thivviya thayai ninaiththu makizhkira nangkal avalutaiya
irakkamulla manratinale ivvulakil sakalap pollappukkalileyum niththiya
maranaththileyum ninru iratsikkappatumpatikku kirupai koorntharulum. intha
manrattukkalaiyellam engkal aantavarakiya iyesunatharutaiya thirumukaththaip
parththu engkalukkuth thantharulum. -aamen.
punitha pernathaththu kannimariyitam ventina jepam:
mikavum
irakkamulla thaye! umathu ataikkalamaka ootivanthu, ummutaiya upakara sakayangkalai
irainysi manratik ketta oruvarakilum ummal kaivitappattathaka orupoothum
ulakil sollak kelvippattathillai enru ninaiththarulum.
kanniyarutaiya
irakkiniyana kannikaiye! thayaiyulla thaye! ippatippatta nampikkaiyal
evappattu umathu thiruppathaththai anti vanthirukkiroom.
perumoosserinthu azhuthu pavikalayirukkira nangkal umathu thayaparaththil kaththu nirkinroom.
avathariththa varththaiyin thaye engkal manrattaip purakkaniyamal thayapariyay kettuth thantharulum thaye -aamen
jenpappavamillamal urpaviththa arssishta mariyaye, pavikalukku ataikkalame, ithoo ummutaiya ataikkalamaka ootivanthoom.
engkal peril irakkamayirunthu engkalukkaka umathu thirukkumaranai ventikkollum.
-arulniraintha manthiram (moonru murai)
parisuththa papparasarin karuththukkal niraiverum patiyaka jepippoomaka :
oru paralooka manthiram, oru arul niraintha manthiram marrum oru thiriththuvath thuthi solvoom.
pitha suthan parisuththa aaviyin peyarale -aamen.