Othasai Parvathamae Lyrics

ஒத்தாசை பர்வதமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை விட்டா எங்களுக்கு யாருமில்லை
உம்மைதான் நம்பி நாங்கள் வாழ்கிறோம்
ஒத்தாசை பர்வதமே உதவும் கன்மலையே
கண்ணீரில் வாழ்ந்து வந்தோம்
கண்ணீரை மாற்றினீரே
வியாதில் வாழ்ந்து வந்தோம்
வியாதியை மாற்றினீரே
எத்தனைபேர் எங்களை
கண்டுதான் கொள்ளவில்லை
நீங்க மட்டும் எங்களை
கிருபையால் கண்டீரே
நீங்க மட்டும் எங்களை
தேடித்தான் வராவிட்டால்
ஊரு சனம் மறந்திருக்கும்
பேரெல்லாம் மறைஞ்சிருக்கும்