Oru Varthai

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
1.மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறி நிக்குமே
கண்ணீர் மறைந்திடும் கவலை தீர்ந்திடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் கர்த்தாவே
2.இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும் (செழிப்பாக மாறிப்போகும்)
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
இருளான வாழ்க்கை எல்லாம்
வெளிச்சமாகி பிரகாசிக்குமே
ஒளி தோன்றிடும் இருள் நீங்கிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் கர்த்தாவே
3.எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
4.வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
பாவ சாப நோய்கள் எல்லாம்
பனித்துளி போல் மறைந்து போகுமே
துன்பம் நீங்கிடும் இன்பம் ஓங்கிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் கர்த்தாவே
தீராத நோய்கள் எல்லாம்
வாறதே நீங்கிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே