Oru Kodi Paadalgal Naan

ஒரு கோடிப் பாடல்கள் நான் பாடுவேன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஒரு கோடிப் பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்
புகழ்பாடி புகழ்பாடி நான் வாழுவேன்
1. மனவீணை (வனவீணை) தனை இன்று நீ மீட்டினாய் – அதில்
மலர்ப்பாக்கள் பல கோடி உருவாக்கினாய்
என் வாழ்வும் ஒரு பாடல் இசைவேந்தனே – அதில்
எழும் இராகம் எல்லாமுன் புகழ்பாடுதே
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
2. இளங்காலைப் பொழுதுந்தன் புகழ்பாடுதே – அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே
அலை ஓயாக்கடல் உந்தன் கருணை மனம் – வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச்சரம்
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
ஒரு கோடிப் பாடல்கள் நான் பாடுவேன் பாடல் வரிகள், Oru Kodi Paadalgal naan paaduvean Lyrics