oppataikkinren iraiva – Oppadaikintren Iraiva

ஒப்படைக்கின்றேன் இறைவா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒப்படைக்கின்றேன் இறைவா – Oppadaikintren Iraiva
ஒப்படைக்கின்றேன் இறைவா அர்ப்பணிக்கின்றேன் தேவா
என்னையும் எனக்குள்ள யாவும் உம் கையிலே ஒப்படைக்கின்றேன்
நான் உந்தன் பிள்ளை நீர் என் தகப்பன் மேய்ப்பனே உம் வழியில் என்னை நடத்தும் களிமண்ணான என் வாழ்வை குயவனே நீ வனைந்து கொள்ளும் இறைவா உன் திருவுள்ளம் நிறைவேற்ற இதோ நான் வருகின்றேன்
ஆகட்டும் என்ற வார்த்தைக்கு அடிபணிகின்றேன் அடிமை நான்
வாழ்வும் வழியும் ஜீவனுமான உண்மை நான் பின் தொடர
மரணம் வரையும் மறுதலிக்காமல் மறுகரை அடைந்திட
உயிரே உயிர்த்தவரே உன்னதரே உடனிருந்து வாழ்பவரே
கோதுமை மணி போல் மடிந்து பலன் தர என்னையே தருகின்றேன்
பணிவிடை புரிந்து பலரை மீட்க பலியாய் படைக்கின்றேன்
உயிர் தவரே உன்னதரே உடனிருந்து வாழ்பவரே