oosanna patiye kootiye makizhnthe

ஓசன்னா பாடியே கூடியே மகிழ்ந்தே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Palm Sunday Songs collection.

ஓசன்னா பாடியே கூடியே மகிழ்ந்தே
தாவீதின் மைந்தனாம் நேசருடன்
பன்னிரு சீடரும் முன்னேசெல்ல
பவனி தான் செல்கிறார் பாங்குடனே
1.ஆத்தும மீட்பை பெற்றிடவே
நித்திய ஜீவனை நான் அடைய -2
வல்லமை தேவனாம் யூத ராஜன்
மரிமீது வருகிறார் ஆசி கூறி -2 ஓசன்னா
2.சமாதானம் மண்ணில் கண்டிடவே
சத்திய சத்குரு யேசுவுடன்
சாலேம் மக்களும் பாடும் நாதம்
ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா -2 ஓசன்னா
3.கன்மலை நாயகன் கர்த்தருக்கு
சத்திய தேவனாம் ஏசுவுக்கு -2
சாரோன் புஷ்பமாம் மீட்பருக்கு
ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா -2 ஓசன்னா