oosana engkal rajanukke

ஓசானா எங்கள் ராஜனுக்கே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Palm Sunday Songs collection.

ஓசானா எங்கள் ராஜனுக்கே
ஓசானா தேவகுமாரனுக்கு -2
சீயோன் நகரமே கொண்டாடு
கர்த்தரின் ஜனமே நீ களி கூறு -2
மகிழ்வோடு ஓசன்னா
களிப்போடு ஒசன்னா
மீட்டாரை ஓ சன்னா
காத்தாரே
1.உற்சாகமனதோடும் , தாழ்மையின் சிந்தையோடும்
கர்த்தரை எதிர்கொள்ள ஓடி வந்தேன்.
ஊரார் முன்னிலையில் உம்மை உயர்த்திட
என்னை தாழ்த்த வந்தேன். – மகிழ்வோடு
2.ஒருவரும் ஏறிடாத, கழுதையை தெரிந்து கொண்டீர்
எருசலேம் நோக்கி அழைத்துச் சென்றேன்.
பயனற்ற என்னையும் நீர் உமக்காக சேர்த்துக் கொண்டு
பரலோகம் நடத்திச் செல்வீர். – மகிழ்வோடு
3.நிந்தைகள் நீக்கிட ,சூழ்நிலை மாற்றிட
ராஜாவே என்னை தேடி எந்தன் ஊர் வந்தீர்.
பூமியின் நன்மைக்காக உம்மை தேடாமல்
நித்திய ஜீவனை பற்றி கொள்வேன். – மகிழ்வோடு
ஓசானா எங்கள் ராஜனுக்கே பாடல் வரிகள், Hosanna Engal Rajanuke Lyrics