Oorukellam nalla seithi onnu christmas song lyrics

ஊருக்கெல்லாம் நல்ல செய்தி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஊருக்கெல்லாம் நல்ல செய்தி ஒன்னு சொல்லுங்க
யார் உனக்காக வந்தாருனு சொல்லுங்க
வீதி எல்லாம் ஒளி ஏத்தனும்னு சொல்லுங்க
வான் திறக்கும் வழி அவர்தானே சொல்லுங்க
எல்லாரும் சொல்லுங்க
ராசா வந்தாராம் அன்பை அள்ளி தந்தாராம்
வந்தாராம் வந்தாராம் அன்பை அள்ளி தந்தாராம்
ரோசா போல தான் வாசம் வீச சொன்னாராம்
ரோசா போல தான் வாசம் வீச சொன்னாராம்
மேசியாவே வந்தாராம் நேசம் அள்ளி தந்தாராம்
JESUS வந்தாராம் நேசம் அள்ளி தந்தாராம்
வேசம் இல்லாம ஒன்னா வாழ சொன்னாராம்
Acting போடாம சேர்ந்து வாழ சொன்னாராம்
முன்பாகவே சில தீர்க்கர் உரைத்தார்
தூதர் துதித்தார்
நாமும் அதுபோல் ஆர்ப்பரிப்போம்
பாருக்கே பாடம் சொல்லி
பாவங்கள் ஒழித்தார் பாடுகள் ஒழித்தார்
மௌனங்கள் தேவையில்லை
ஸ்தோத்தரிப்போம்
நமக்குள் இருக்கும் கசப்பை மறப்போம்
கவலை துறப்போம்
மனதிலிருந்தே நாம் சிரிப்போம்
சிலுவை வழியே சிறகை விரிப்போம் உயர பறப்போம்
வழிகள் திறக்கும் நாம் துதிப்போம்