oohoo ko osannaa allelujah

ஓகோ கோ... ஓசன்னா அல்லேலூயா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஓகோ கோ... ஓசன்னா அல்லேலூயா
நம் ராஜா வருகின்றார்-2
நம் இயேசு ராஜா தூதர்களோடு
எருசலேமுக்கு வருகின்றார்
ஆயிரம் வருடம் சாத்தானைக் கட்டி
ஆளுகை செய்திடுவார்-2
சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடுமே
மரித்தவர் உயிர்த்தெழுந்து முன் செல்வாரே
அழியாத ராஜ்ஜியம் அமைந்திடுமே -2
நம் ராஜா வருகின்றார்