oo! pethlekem munnanaiyantaiyile – Oh Bethleham Munnanaiyandaiyilae

ஓ
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஓ! பெத்லெகேம் முன்னணையண்டையிலே – Oh Bethleham Munnanaiyandaiyilae
1.ஓ! பெத்லெகேம் முன்னணையண்டையிலே
எகோபித்து வாருங்கள் பிள்ளைகளே;
இதோ! இது மைந்தனை நித்ய பிதா
ஈவாக அளித்த மா தூய இரா.
2.விளக்கு நன்றாகப் பிரகாசித்ததே,
இப்பாலகன் வெள்ளைத் துணிகளிலே
சுற்றுண்டு கிடக்கிறார், தூதரிலும்
சிறந்த இப்பிள்ளையைப் பணியவும்.
3.வைக்கோல் மேல் கிடக்கிற பிள்ளையண்டை
மரியாள், யோசேப்பும் களிக்க, அதை
ஊர் மேய்ப்பர் வணங்க, ஆகாயத்திலே
தூதர்களின் திரள் துதிக்கிறதே.
4.அனைவரும் கைகளைக் கட்டிக்கொண்டே
தாழ்வாய் முழங்கால் படியிட்டிருந்தே
தொழுவீர் இப்பிள்ளையை மேய்ப்பரைப்போல்
தூதர்களின் கூட்டத்தில் துதியுங்கள்.
5.துதிக்கிறோம் நேசிக்கப்பட்டவரே,
நீர் எங்கள் எல்லோரையும் ரட்சிக்கவே
இம்முன்னணையில் மிக்க ஏழை ஆனீர்;
நீர் மரத்தில் மாளவும் மனங்கொண்டீர்.
6.பிள்ளைகளில் அருமையானவரே,
ஈடாக எதைத் தருவோம், உமக்கே;
இவ்வுலகப் பொக்கிஷத்தை விரும்பீர்!
நொறுங்கிய நெஞ்சை நீர் நேசிக்கிறீர்