onrukkum uthavatha ennaiyum neer – ondrukkum uthavaatha ennaiyum neer

ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் – ondrukkum uthavaatha ennaiyum neer
என்னையும் நீர் பாடல் வரிகள்.
ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர்
ஒரு பொருட்டாக தெரிந்து கொண்டீர்-2
தாய் போல என்னைத் தேற்றி
தந்தை போல என்னை ஆற்றி
தோள் மீது சுமக்கும் தேவன் நீர் எனக்கு
துணையாக இருக்க பயம் இல்லையே
கண்ணீரைத் துடைக்கும் கரம் என்னோடு இருக்க கலக்கங்கள் எனக்கு இனி இல்லையே….
நன்றி நன்றி ஐயா
அன்பின் தெய்வம் நீரே
நன்றி நன்றி ஐயா
அன்பின் தெய்வம் நீரே
நன்மைகளை நினைத்து நாள்தோறும் உம்மை துதித்து கண்ணீரால் உம் பாதம் நனைக்கின்றேனே…
தாழ்மையில் என்னை நினைத்து
தேவைகளை அறிந்து
அற்புதர் என் வாழ்வை நடத்தினீரே…
நன்றி என்று நினைக்கும் போது
நன்மை நினைத்து இதயம் துடிக்கின்றதே
நன்றி என்று நினைக்கும் போது
நன்மை நினைத்து இதயம் துடிக்கின்றதே
உன்னதர் உம் மறைவில் வல்லவர் உம் நிழலில் என் வாழ்வு மகிமையாய் மாறினதே
உமக்காக நான் வாழ உம் அன்பை தினம் கூற என் தேவன் அன்பாக நடத்தினீரே
நன்றி என்று நினைக்கும் போது
நன்மை நினைத்து இதயம் துடிக்கின்றதே
நன்றி என்று நினைக்கும் போது
நன்மை நினைத்து இதயம் துடிக்கின்றதே