onnum illai vazhvil onnum

ஒண்ணுமில்லை வாழ்வில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஒண்ணுமில்லை வாழ்வில் ஒண்ணுமில்லை
தேவனை மறந்தா இந்த மண்ணுக்குள்ள
அண்ணே அண்ணே பேதுரு அண்ணே
அண்ணே அண்ணே
வலயத்தான் தூக்கிக்கிட்டு
மீன் பிடிக்கப் போறன்னு
போற இடம் சொல்லி போங்கண்ணே
நாங்க உங்களை நம்பி ஏமாந்தோமண்ணே
குருடரை பார்க்க செய்யும்போது
செவிடரை கேட்க செய்யும்போது – அண்ணே
கூட இருந்து கண்டு களிச்ச
அண்ணே பேதுரு அண்ணே
உங்க விசுவாசம் எங்கே போச்சண்ணே
இப்ப இயேசுவை மறந்து போவது
எங்கண்ணே
எத்தனையோ நன்மை செய்த தேவன்
நம்மை இனிமேலும்
நடத்திடுவார் அண்ணே
பேதுரு அண்ணே
அழைத்த அழைப்பை மறந்திடாதே
அண்ணே பேதுரு அண்ணே
நம்மை பிழைக்க வைக்கும்
தேவன் தான் அண்ணே நாம்
அவருக்காக உழைப்போம் அண்ணே அவர்
நாமத்தையே உயர்த்துவோம் அண்ணே
அண்ணே அண்ணே