Onedrume PuriyaVillai

ஒன்றுமே புரியவில்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Onedrume PuriyaVillai – ஒன்றுமே புரியவில்லை
ஒன்றுமே புரியவில்லை
வறண்ட வாழ்க்கை தானோ
கஷ்டம் மேல் கஷ்டங்கள்
பாரம் மேல் பாரங்கள்
தாங்க முடியவில்லை
சில நேரம் மகிழ்ச்சி
பல நேரம் தளர்ச்சி
காரணம் புரியவில்லை
திடமாக உம்மை நான் பின் பற்றிச் செல்ல
முடியவே முடியவில்லை
காலங்கள் கரைகின்றன
நாட்களோ நகர்கின்றன
எனக்கு பதில் சொல்ல வேண்டுகிறேன்
என்னையும் வழி நடத்த விரும்புகிறேன்
கடைசியாக விண்ணப்பம் ஒன்றை
வைக்கிறேன் கேளுமையா (இயேசையா)
கடைசி மட்டும் உம்மை பின் பற்றிச்செல்ல
கிருபை தாரும் அய்யா ( இயேசையா)
காலங்கள் கரைகின்றன
நாட்களோ நகர்கின்றன
எனக்கு பதில் சொல்ல வேண்டுகிறேன்
என்னையும் வழி நடத்த விரும்புகிறேன்.