Ondrumillaamaiyil Irunthennai

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.

1. ஒன்றுமில்லாமையில் இருந்தென்னை
உமது சாயலில் சிருஷ்டித்தீர்
நித்திய அன்பென் மேல் கொண்டதால்
குமாரனைத் தந்து இரட்சித்தீரே
உம் மகா கிருபைக்காய்
உம்மை நான் துதித்திடுவேன் என்றும் – 2
2. பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்க
கோர பாடுகள் ஏற்றீரன்றோ
தழும்புகள் உந்தன் மேனியிலே
எந்தனுக்காய் நிந்தை ஆனீரோ – உம் மகா
3. நித்திய ஜீவனும் மோட்ச வாழ்வும்
பாவி எனக்காய் வாக்களித்தீர்
கிருபையாலே தம் ஆவீ தந்து
வின்-ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர் – உம் மகா
4. கிரகிக்க முடியா நன்மைகள்
வின் ஆடை வின்னவர் நல்கினார்
எல்லா தீமையினின்றும் என்னை
கன்மனி போல காத்திடுவார் – உம் மகா
5. அழியா வின் – உரிமை எனக்குண்டு
இயேசுவின் திவ்ய சந்நிதியில்
நீதியின் கிரீடம் சூட்டிடுவார்
வின் வாழ்வையும் பரிசளிப்பார் – உம் மகா
ஒன்றுமில்லாதிருந்த என்னையும்
உந்தனின் சாயலில் சிருஷ்டித்தீர்
நித்யமான அன்பினால் என்னையும்
இயேசுவின் இரத்தத்தால் மீட்டீரே
உம் மகா கிருபைக்காய்
உம்மை நான் துதிப்பேன் என்றென்றும்
2. எந்தன் பாவங்களை போக்கவே
உலகத்தில் வந்த என் இயேசுவே
பாடுகள் கஷ்டங்கள் ஏற்று நீர்
சிலுவையில் எனக்காய் மரித்தீர் – உம் மகா
3. மன்னிப்பும் புது வாழ்வும் தந்தீரே
என்னுள்ளே வந்தீரே என் இயேசுவே
பரிசுத்த ஆவியை நீர் தந்தீரே
ஆவியின் ஆசீர்வாதங்கள் தந்தீரே – உம் மகா
4. உணவும் உடையும் செல்வமும்
எனக்காய் தந்தீரே என் இயேசுவே
தீமைகள் யாவிலும் நின்றென்னை
கண்மணி போல பாதுகாத்தீரே – உம் மகா