oliyam iraiye varay eliyoor nenysam thanile

ஒளியாம் இறையே வாராய் எளியோர் -
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே
ஒளியாம் இறையே வாராய் (2)
1. விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர் -2
உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக – 2
2. நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால் -2
உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால்
ஒளியே எழிலே வருக – 2
3.அருளே பொங்கும் அமலா இருளைப் போக்க வாராய் -2
குறையை நீக்கும் நிமலா நிறையை வளர்க்க வா வா…
ஒளியே எழிலே வருக – 2