oli neeyae yesuve yesu

ஒளி நீயே இயேசுவே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஒளி நீயே இயேசுவே இயேசுவே
வாழ்வில் இருளேது இயேசுவே இயேசுவே
வழி செல்லும் பாதையெல்லாம் இயேசுவே
உன் உடனிருப்பேன் துணையாகும் இயேசுவே
1. அலைமேல் நடந்து வந்து பயமகற்றி
திடமளித்தாய் – அலையாய் எழுந்த
புயல் அடங்கிடவே துணையளித்தாய்
வாழ்வில் அலையலையாய் துன்பம்
என்னை நெருக்குதையா
வீழ்ந்தோர் கரம்பிடிக்கும் கடவுள்
துணை தேடுதையா இயேசுவே (2)
துணையாய் எழுவாய் ஒளியே தெய்வமே
2. நோயால் வாழ்விழந்தோர் இன்னல் நீக்கி
கருணை கொண்டாய் நாட்கள்
காத்திருந்தோர் பசி நீக்கி நிறைவளித்தாய்
நாளும் நோய் நொடிகள் வறுமை
என்னை சூழுதையா வாழ்வில் நலன்
பெறவே வளம் பெறவே தேடுதையா