nyanam nirai kannikaiye

ஞானம்நிறைகன்னிகையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Ave Maria, Mother Mary Songs and Roman Catholic Songs collection.

ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் ஏழு தூண்களுமாய் – 2
பலிபீடமுமாய் அலங்கரித்தாயே
1. பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உன்னையே பரமன்
பாவ நிழலே அணுகா
தாய் உதரம் நீ தரித்திடவே – 2
தனதோர் அமலன் தலமெனக் கொண்டார் – 2
2. வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
வாழ்வோர் அனைவரின் தாயே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே – 2
வானோர் துதிக்கும் இறைவியே வாழி – 2