Niththamum Unnai Nadathiduvean

நித்தமும் உன்னை நடத்திடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நித்தமும் உன்னை நடத்திடுவேன்
நீ பயப்படாதே
நீ அறிந்திடாதே ஆராய்ந்திடாத
வழியில் நடத்திடுவேன்
1.உன் வீடு என்றென்றுமாய்
என் கிருபையில் நிலைநிற்கும்
ஏற்ற காலங்களிலே
உன் காரியம் கைகூடும்- நித்தமும்
2.தலைமுறை தலைமுறையாய்
உன் குடும்பம் பிரகாசிக்கும்
அதில் வளரும் பிள்ளைகளே
தேவ தூதனை போலிருக்கும்- நித்தமும்
3.சாட்சியின் சந்ததியாய்
என்னையே ஆராதிக்கும்
அதில் பாடும் கீதங்களே
என் சுகந்த வாசனையாகும்- நித்தமும்
4.என் பரிசுத்த பர்வதமாய்
என் ஜனம் குடியிருக்கும்
அதின் வாசஸ்தலங்களே பூமியை
சுதந்தரிக்கும் – நித்தமும்