Nithiyare Enggal Nithiyare

நித்தியரே எங்கள் நித்தியரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நித்தியரே எங்கள் நித்தியரே அகிலத்தை ஆள வந்த நித்தியரே
நித்தியரே எங்கள் நித்தியரே அடியேனை ஆள வந்த நித்தியரே
ஆயனைப்போல் நடத்துகின்றிரே அன்பாலே தாங்குகின்றிரே -2
1. அரணான கோட்டை நீரே
அடைக்கலமும் துருகம் நீரே
என்னை என்றும் காக்கின்ற காவல் நீரே
ஆதியும் அந்தமும் நீரே
அல்பாவும் ஒமேகா நீரே
என்னில் என்றும் வாழ்கின்ற
வாழ்வு நீரே
2 . மன்னாதி மன்னன் நீரே
மறுரூப வேந்தன் நீரே
மண்ணான எம்மை என்றும் உயர்திட்டீரே
மலை அதிரும் மகிமை நீரே
எங்கள் மகிமை என்றும் நீரே
மனுக்குலத்தை தேடி வந்த எளிமை நீரே
3. வார்த்தை கொண்டு வாழ்ந்து வரும்
வார்த்தையான தேவன் நீரே
சொன்ன வாக்கை காப்பாற்றும் அன்பின் தெய்வமே
மேன்மை கொண்டு மீண்டு வரும்
மேன்மையான தேவன் நீரே
பூமி எங்கும் ஆர்ப்பரிக்கும் ஆரவாரமே