nithiya kirubai neengaatha

நித்திய கிருபை நீங்காத கிருபை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நித்திய கிருபை நீங்காத கிருபை
சத்தியம் காத்திடும் கர்த்தனே அளிப்பார்
சத்துரு சேனை நெருங்கியபோதும்
சத்துவம் அளித்திடும் நித்திய தேவன்
தேடிடும் வேளை தேடியே வந்து
திவ்விய கிருபை அளித்திடுவாரே
உத்தமனாக நிலைபெற்று வாழ்ந்திட
கர்த்தரின் கிருபை அநுதினம் தேவை
சோதனை வேளை ஜெயம் பெற்று ஏகிட
தேவ கிருபை காலமே அளிப்பார்
கோதுமை மணியென மாய்ந்துமே சாக
ஊழிய பாதையில் கிருபையே தேவை
கழுகினைப் போல புதுபெலன் அடைந்திட
கர்த்தரின் கிருபையை நாடிடுவோமே
முற்றும் முடிய காத்திடும் கிருபை
முடிவில்லா இராஜ்ஜியம் சேர்த்திடும் கிருபை
தேடியே நாடி சென்றிடுவோமே
தேவ சமூகம் நாடிடுவோமே
கிருபையின் பூரணர் வெளிப்படும் நாளில்
மகிமையில் சென்றிட கிருபையே தேவை
சீயோனில் சேர்த்துமே நீடூழி காலமாய்
தேவ தேவனை தரிசித்து மகிழ்வோம்