nissayamaka mutivu varum un

நிச்சயமாக முடிவு வரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நிச்சயமாக முடிவு வரும் உன்
நம்பிக்கை வீண் போகாது (2)
குறித்த காலத்தில் நிறைவேறும்
அது தாமதம் செய்யாது (2)
எதிரியின் சூழ்ச்சிகள் வஞ்சனைகள்
எல்லாம் அறிந்திடுவார் – இயேசு (2)
விழுந்து விடாமல் தப்புவித்து
நிச்சயம் மீட்டிடுவார் இயேசு – குறித்த (2)
தகப்பன் பிள்ளைக்கு இரங்குதல் போல்
உனக்கு இரங்கிடுவார் – இயேசு (2)
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால்
நிச்சயம் நிரப்பிடுவார் உன்னை – குறித்த (2)
திக்கற்ற பிள்ளைக்கு இரங்கிடுவார்
நிம்மதி அளித்திடுவார் இயேசு – (2)
ஒடுக்கப்பட்டோரை மீட்டிடுவார்
நிச்சயம் விடுவிப்பார் இயேசு – குறித்த (2)