ninivaekku irangkineerae en

நினிவேக்கு இரங்கினீரே என்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நினிவேக்கு இரங்கினீரே – என்
இலங்கைக்கு இரங்கிடுமே – உம்
இரக்கத்தைக் காட்டியே – என்
இலங்கைக்கு இரங்கிடுமே – உம்
இரக்கத்தைக் காட்டியே – என்
ஜனத்துக்கு இரங்கிடுமே
வருடங்கள் தோறும் எங்கள் தேசத்தில்
யுத்த சத்தங்கள் போதுமே
வருடங்கள் தோறும் எங்கள் தேசத்தில்
இரத்தம் சிந்துதல் போதுமே
என் ஜனங்களுக்காக நீர் சுமந்த
சிலுவையை நினைத்திடுமே
என் ஜனங்களுக்காக நீர் சிந்தின
திரு இரத்தம் நினைத்திடுமே
எங்கள் ஆதி பிதாக்கள் செய்த பாவங்கள்
தயவாய் மன்னியுமே
சிலை நமஸ்கார பில்லி சூனிய
பாவங்களை மன்னித்திடுமே
சிலை நமஸ்காரம் இனத்துவேஷங்கள்
பாவங்களை மன்னித்திடுமே
உந்தன் சேவை செய்த ஊழியரை
துன்பம் செய்து தூசித்தோமே
அந்த சாபம் யாவும் நீங்கச் செய்து
அருள் மாரி ஊற்றுமய்யா