Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics

நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நினைத்து பார்க்கிறேன்
கடந்து வந்த பாதைகளை
தியானிக்கிறேன் உம் தயவை
திரும்பி பார்க்கிறேன் துவங்கின
காலங்களை புரிந்து கொள்கிறேன் உம் அன்பை
துவங்கினேன் ஒன்றுமில்லாமல்
திருப்தியாய் என்னை நிறைத்தீர் -2
நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்
கடைசி வரை கைவிடாமல் நடத்திச் செல்பவர் -2
தரிசனம் ஒன்று தான் அன்று சொந்தமே
கையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே -2
தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்
தலைகுனியாமல் என்னை உயர்த்தினீர் -2 நீர் உண்மை
ஏங்கி பார்த்த நன்மைகள் இன்று என்னிடமே
நிரம்பி வழியும் ஆசி எனக்குதந்தீரே -2
குறைவிலும் உண்மையாய் என்னை நடத்தினீர்
உம் கிருபை அளவில்லாமல் பொழிந்திட்டீர்
குறைவிலும் உண்மையாய் என்னை நடத்தினீர்
இயேசுவே உம் கிருபை அளவில்லாமல் பொழிந்திட்டீர- நீர் உண்மை
இதுவரை தாங்கின கிருபை இனிமேலும் தாங்கிடுமே
இதுவரை சுமந்த கிருபை இனிமேலும் சுமந்திடுமே -4 – நீர் உண்மை