nichayamaga nadanthidumae

நிச்சயமாக நடந்திடுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

குறித்த காலத்திற்கு தரிசனம் எல்லாம்
நிச்சயமாக நடந்திடுமே -2
தடைகள் எல்லாம் தகர்ந்திடுமே
தாமதம் எல்லாம் மாறிடுமே -2
நிச்சயமாக நடந்திடுமே
தரிசனம் எல்லாம் நிறைவேறுமே -2
1.என் மேல் வைத்த திட்டங்கள் எல்லாம்
எப்படியாகிலும் நிறைவேற்றுவீர் -2
சூறை செடியின் அனுபவங்கள்
சீக்கிரமாக முடிந்திடுமே-2
நிச்சயமாக நடந்திடுமே
தரிசனம் எல்லாம் நிறைவேறுமே -2
2.மேகம் போன்ற சாட்சிகள் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை -2
இயேசுவை நோக்கி ஓடிடுவேன்
ஜீவ கிரீடம் பெற்றுக் கொள்வேன் -2
நிச்சயமாக நடந்திடுமே தரிசனம்
எல்லாம் நிறைவேறுமே -2