Netrum Indrum Endrum

நேற்றும் இன்றும் என்றும் மாறா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவா ஸ்தோத்திரம் நேசம் பாசம்
அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம்
அற்புதமானவர் அதிசயமானவர்
செயல்களிலே மிக மகத்துவமானவரே
ஸ்தோத்தரிப்போம் நாம் ஸ்தோத்தரிப்போம்
துதி பாத்திரரை நாம் ஸ்தோத்தரிப்போம்
ஸ்தோத்திர பலிகளை உதட்டினிலே சொல்லி
ஊக்கமாக நாம் ஸ்தோத்தரிப்போம்
2.அகில உலகை ஆண்டுகொண்ட
ராஜா ஸ்தோத்திரம் ஆயிரமாயிரம்
சேனைகளுடைய ராஜா ஸ்தோத்திரம்
உன்னதமானவர் உலகில் உயர்ந்தவர்
யுத்தத்திலே மிக வல்லமையுள்ளவரே
ஆர்ப்பரிப்போம் நாம் ஆர்ப்பரிப்போம்
மிகப் பெரியவரை நாம் ஆர்ப்பரிப்போம்
உலகில் உள்ள சாத்தானை – ஜெயம்
கொண்டவரை நாம் ஆர்ப்பரிப்போம்
3.இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
உயிரே ஸ்தோத்திரம் இருக்கின்றவராய் இருக்கின்றவரே உமக்கே ஸ்தோத்திரம
சாவை வென்றவர் சர்வ வல்லவர்
சகலமும் செய்ய வல்லமையுள்ளவரே
துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம்
உயிருள்ளவரை நாம் துதித்திடுவோம்
உலகின் முடிவு பரியந்தம் – நம்
உடனுள்ளவரை துதித்திடுவோம்