nenysamellam athu ummitame

நெஞ்சமெல்லாம் அது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நெஞ்சமெல்லாம் அது உம்மிடமே
என் நினைவுகளும் அது உம்மிடமே
இயேசுவே இன்பமே நான்
என்றும் உம்மை பாடிடுவேன்- என் நெஞ்சம்
லீலிபுஷ்பம் நீரல்லவா
சரோனின் ரோஜா நீரல்லவா -2
ஆயிரம் ஆயிரம்
சூரிய ஒளியும் நீரல்லவா -2
அழகானவா அன்பானவா
என் வாழ்வில் என்றும் துணையானவா – என் நெஞ்சம்
கன்மலை தேனும் நீரல்லவா
என் மன கோவிலின் வரமல்லவா-2
தாகத்தை தீர்க்கும்
ஆவியின் ஜீவ நதியல்லவா -2
அடைந்தேன் மகிழ்ந்தேன்
இளைப்பாறுதல் என்றும் நீரல்லவா – என் நெஞ்சம்