nenjile nirainthavare

நெஞ்சிலே நிறைந்தவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நெஞ்சிலே நிறைந்தவரே துதிக்கிறேன்
நினைவில் நிறைந்தவரை துதிக்கிறேன்
நின்றாலும் நடந்தாலும்
உமது நினைவுதான்
அமர்ந்தாலும் படுத்தாலும்
உமது நினைவுதான்
நான் வலது பக்கம்
இடது பக்கம் சாயும்போது – 2
இதுதான் வழி என்று காட்டுகின்றீர்
ஸ்தோத்திரம் என் வழிகாட்டியே
ஸ்தோத்திரம் என் துணையாளரே
என் கால்கள் கல்லில் இடறாமல்
பாதுகாக்க உம் – 2 தூதர்களை
எனக்காய் அனுப்புகின்றீர்
ஸ்தோத்திரம் என் அடைக்கலமே
ஸ்தோத்திரம் என் புகலிடமே
நீர் நேசிக்கின்ற பாதைகளை
எனக்குக் காட்டி – 2
என் மேல் உம் கண்கள் வைத்து
நடத்துகின்றீர்
ஸ்தோத்திரம் என் மேய்ப்பரே
ஸ்தோத்திரம் என் மீட்பரே