neeye emathu vazhi neeye emathu oli

நீயே எமது ஒளி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

நீயே எமது வழி நீயே எமது ஒளி
நீயே எமது வாழ்வு இயேசையா – 2
1.நான்கு திசையும் பாதைகள்
சந்திக்கின்ற வேளைகள்
நன்மை என்ன தீமை என்ன
அறியாத கோலங்கள் – 2
நீயே எங்கள் வழியாவாய்
நீதியின் பாதையின் பொருளாவாய் – 2
உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்
அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே
2.துன்ப துயர நிகழ்வுகள்
இருளின் ஆட்சிக் காலங்கள்
தட்டுத் தடுமாறி விழத்
தகுமான சூழல்கள் – 2
நீயே எங்கள் ஒளியாவாய்
நீதியின் பாதையின் சுடராவாய் – 2
உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
உண்மையின் இறைவா உனதருள் தாரும் – நீயே