neethimaan mudhivayadhilum kani

நீதிமான் முதிர்வயதில் கனிகொடுப்பான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீதிமான் முதிர்வயதில் கனிகொடுப்பான்
நேர்மையாளன் முதிர்வயதில்
கனிகொடுப்பான்
பனைமரம் போல் வளர்ந்திடுவான்
பேரீச்சை மரம்போல் செழித்திடுவ
1. இறைவனின் திருச்சட்டத்தில்
நேர்மையாளன் மகிழ்ந்திருப்பான்
இரவும் பகலும் தியானிப்பான்
நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல்
பருவ காலத்தில் கனிகொடுப்பான்
ஹாலேலூயா ஹாலேலூயா (4)
2. நீதிமான்கள் துன்பத்திலே
ஆண்டவர் விடுதலை தருகின்றார்
அன்பிலும் நீதியிலும் உண்மையிலும்
துன்பம் வந்தாலும் வாக்கை மீறாமல்
செய்யும் அனைத்திலும் வெற்றி பெறுவான்
இறைவனின் கூடாரத்தில்
நேர்மையாளன் குடியிருப்பான்
நீதிமான்கள் வீடுகளில் வெற்றியின்
மகிழ்ச்சி குரல் ஒலிக்கும்
ஆண்டவர் படைக்கும் நாட்களெல்லாம்
தேவனை கூப்பிடும் நேரமெல்லாம்
உடனடி பதிலை நீதிமான் கண்டு
நன்றியின் பலியை செலுத்திடுவான்