Neerintri Verillai Aiya Lyrics

நீரன்றி வேறில்லை ஐயா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரன்றி வேறில்லை ஐயா (ஐயா)
எல்லாமே நீர் தானே – உடலும்
உள்ளமெல்லாம் உயிரெல்லாம் நீர் தானே
உம்மை நாடி நாடி தினம்
பாடி பாடி மகிழ்வேன் – உந்தன் பாதம்
தேடி தினம் ஒடி ஒடி வருவேன்
1. துன்ப வேளையில் வேண்டிடும் போது
நல்ல துணை நீரே
தாங்கா துயரில் தவித்திடும் போது
தாங்கும் பெலன் நீரே – எந்தக்
காலத்திலும் உம்மை ஸ்தோத்திரிப்பேன்
எந்த வேளையிலும் நினைப்பேன்
ஒரு இமைப்பொழுதும் உம்மை
மறந்திடாமல் என் வாழ்வினில் இனி
2. பாவ பாதையில் பாரினில் அலைய
தேடி வந்தவரே – பாவி எனக்காய்
சிலுவையில் தொங்கி வாழ்வு தந்தவரே
உயிருள்ளவரை என் உன்னதரை
உயிரோடு கலந்திடுவேன் – இரவும்
பகலும் இதயம் நிறுத்தி இசை கானம் பாட