neerinri nan vazha mutiyuma

நீரின்றி நான் வாழ முடியுமா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீரின்றி நான் வாழ முடியுமா
உம் துணை இன்றி பாட முடியுமா -2
என் தேவனே என் ராஜனே உம் அன்பை நான் மறப்பேனோ
என் தேவனே என் ஏசுவே உங்க அன்பை நான் மறப்பேனோ
அழுதிடும் குழந்தை போல தினமும் உம் மடியில்
தவழ துடிக்கிறேன் உம்மை நினைக்கிறன்
வறண்ட நிலத்தை போல நித்தம் கதறுகிறேன்
உந்தன் ஆவியினால் நிறைத்திடுமே
கலங்கி நிற்கும் வேளை எல்ரோய் தேவன் நீர்
தனிமையில் தவிக்கும் போது யெகோவா ஷம்மா நீர்
வியாதியில் நெருக்கும் போது யெகோவா ராஃப் நீர்
படைகள் சூழ்ந்த போது எல்ஷடாய் தெய்வம் நீர்