Neere En Unauv Neere En Urauv

நீரே என் உணவு நீரே என் உறவு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்
நீரே என் உணவு நீரே என் உறவு நீரே என் வாழ்வு இயேசுவே
என்றும் மாறாத மறையாத நேசமே – 2
உயிராக வா என் உணவாக வா
விருந்தாக வா திருவிருந்தாக வா – 2
1. வானின்று வரும் யாவும் நலமானதே
எமை வாழ்விக்கும் மனை போல வளமானதே – 2
வானின்று வந்த உனதுயிர் உடலும் – 2
நலமாகுமே எனக்கு அமுதாகுமே – 2 (உயிராக வா)
2. உனை உண்டு நான் காணும் பலனானது
உந்தன் துணை கொண்டு துயர் வெல்லும் திறமாகுமே – 2
தாவீதின் தவல்ப்போல் போய் மோசேயின் கோல்ப்போல் – 2
உனை நம்பும் என்னில் செயலாற்றவா – 2 (உயிராக வா)