neer varum varaiyil nan vizhiththiruppen

நீர் வரும் வரையில் நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் வரும் வரையில் நான் விழித்திருப்பேன்
புத்தியுள்ள கன்னிகையாக
அல்லேலூயா மாரநாதா
அல்லேலூயா வாரும் தேவா
உந்தன் புன்முகம் கண்டு நான் பூரிப்படைவேன்
எல்லா வருத்தங்கள் மறந்திடுவேன்
என்னை இழுத்துக் கொள்ளும் எந்தன் நேசரே நீர்
உம்மோடு ஓடி வருவேன்
மனதும் உம்மை வாஞ்சிக்குதே
மணவாளனே வாருமே என்
மனதும் உம்மை வாஞ்சிக்குதே
மணவாளனே வாருமே – நீர்
மத்திய வானத்தில் நீர் வரும் வேளையிலே
உம்மை சந்திக்க ஆயத்தமாவேன்
மணவாட்டியே வா என்று அழைக்கும் சத்தம்
இன்பமாய் தொனித்திடுதே
பெருங்கூட்டமாய் உம்மை சந்தித்திட ஆயத்தப்படுத்திடுவேன்