neer poothumae yesayya neere

நீர் போதுமே இயேசையா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் போதுமே இயேசையா
நீரே போதுமே -2
1. நிலையில்லாத உலகினிலே
நிலைத்திருப்பதும் உம் கிருபையே-2
நீரன்றி எனக்கு வாழ்வேதையா
நீரன்றி வேறு துணையேதையா-2
2.அன்பேயில்லாத மனிதர்களில்
அன்பாகவே நீர் இருக்கின்றீர்
ஆதரவும் எனக்கு நீர் தானையா
ஆறுதலும் நீர்தானையா
3. ஒன்றுமில்லாத வேளையிலும்
உதவிடுதே உம் கிருபையே
தேவையெல்லாம் எனக்கு நீர்
தானையா தேற்றரவும் நீர் தானையா
4. தூய்மையில்லாத வாழ்வினிலே
தூயவரே நீர் வந்தீரே
மன்னிப்பவரும் நீர் தானையா
மாறாதவரும் நீர் தானையா