neer payssalana thoottaththai – Neer Paichalana Thottathai

நீர் பாய்ச்சலான தோட்டத்தை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் பாய்ச்சலான தோட்டத்தை – Neer Paichalana Thottathai
(ஏசாயா 58:11)
நீர் பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும்
வற்றாத நீரூற்றை போலவும் இருப்பாயே
என்று உரைத்த நல்லவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
(எரேமியா 17:7-8)
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து
நம்பியிருப்பவர் பாக்கியவான் -2
தேவன் என் பட்சத்தில்
வெட்கப்பட்டு நான் போவதில்லை
-நீர் பாய்ச்சலான
(எரேமியா 17:7-8)
தண்ணீர் அண்டையில் நாட்ட பட்டு
உஷ்ணம் வருவதை அறியேனே-2
தப்பாமல் கனி தரும்
மரத்தைப் போல் இருப்பேன் நான் -நீர் பாய்ச்சலான
(சங்கீதம் 1:3)
காலத்தின் கனியை தந்து
நீர் கால் ஓரமாய் நடப்பேனே-2
செய்வதெல்லாம் வாய்க்குமே
இயேசுவின் நாமத்தினால் -நீர் பாய்ச்சலான