Neer Mattum Illai Endraal Lyrics

நீர் மட்டும் இல்லை என்றால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நீர் மட்டும் இல்லை என்றால்
என்றோ நான் அழிந்திருப்பேன்
உம் கிருபை மட்டுமே இல்லை என்றால்
பாவத்தில் மரித்திருப்பேன்
நீர் என்னை தேடி வந்தீர்
உம் ஜீவன் எனக்காய் தந்தீர் – நீர் மட்டும் இல்லையென்றால்
1.அழியா வாழ்வை எனக்கு தந்திட
ஆணிகள் பாய்ந்தன உம் கரத்தில்
என் மேல் இருந்த சாபம் போக்கிட
சாபமானீர் சிலுவை மேல்
என்னை மீட்டிடவே
என்னை உயரத்திடவே
உம் ரத்தம் சிந்தினீரே
நீர் என்னை தேடி வந்தீர்
உம் ஜீவன் எனக்காய் தந்தீர்
2.மேய்ப்பன் இல்லா ஆடுகள் போல
நான் அலைந்த போதும்
தண்ணீர் இல்லா பாலைவனத்தில்
தாகத்தால் நான் தவித்த போதும்
எந்தன் அடைக்கலமாய்
என் ஆதரவாய்
நீர் எனக்காய் இறங்கி வந்தீர்
நீர் என்னை தேடி வந்தீர்
உம் ஜீவன் எனக்காய் தந்தீர்
அலைந்து திரிந்த போதும்