Neer Maathram Lyrics

நீர் மாத்ரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Verse 1
என் தேவனே என் பிரியனே
உந்தன் அன்பை எண்ணி நான் மகிழ்வேன்
என் உயிரே என் சுவாசமே
நீரில்லாமல் நான் ஒன்றுமில்லையே
Chorus
நீர் மாத்ரம் போதுமே
நீர் மாத்ரம் போதுமே
ஏசுவே
Verse 2
என் கண்களினாலே உம்மை துக்கப்படுத்தினேன்
என் வார்த்தைகளாலே உம்மை காயப்படுத்தினேன்
உலக சிந்தையால் உந்தன் அன்பை மறந்தேன்
நான் தகுதியில்லா அன்பை நாடினேன்
சிலுவை அன்பே உண்மை ஆனது – நீர் மாத்ரம்
Verse 3
என் வாழ்க்கை முடிந்ததென்று அழுது கதறினேன்
நான் உம்மை வெறுத்தேன், என் தவறை மறந்தேன்
உந்தன் சித்தத்தை நான் உதறித் தள்ளினேன்
ஓ… வெட்கம் அடைந்து தனிமையாய் நின்றேன்
ஓடி வந்து அணைத்துக் கொண்டீரே